• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய ஆர் பி உதயகுமார்..,

ByP.Thangapandi

Jul 18, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜோதில்நாயக்கணூர் கிராமத்தில் அதிமுக முன்னாள் முதல்வரும் கழக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார்., முன்னதாக ஜோதில்நாயக்கணூர் கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி, வாலகுருநாதர் கோவில் அதிமுக நிர்வாகிகளுடன் வழிபாடு செய்தார்.,

தொடர்த்து பேசிய முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயக்குமார்.,

ஆடி வெள்ளிக் கிழமை அம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளதால் தமிழ்நாட்டிற்கே விடிவுகாலம் பிறக்கும்.

ஏற்கனவே உள்ள ஆட்சியாளர்கள் ஏதோ அரசர்கள் போலவும், நாமெல்லாம் அடிமைகள் போலவும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.எதை கேட்டாலும் பதில் இல்லை., ஒர் அணியில் திரளவேண்டும் என்கிறார்கள், ஏற்கனவே அம்மாவின் ஆட்சி வேண்டும் என ஓர் அணியில் தான் திரண்டுள்ளனர்.

ஒவ்வொரு திட்டம் மூலமும், மக்களை கொச்சை படுத்தி வருகிறார்கள் திமுகவின் மூத்த தலைவர்கள்.

சொத்துவரி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய சொன்னால் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என புது கதையை சொல்லி வருகிறார்கள்., அப்போது அப்போது கருத்து சொல்ல ஒரு தலைவரை வைத்துக் கொள்கிறார்கள்.

அம்மாவின் அரசில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை ஊத்தி மூடி முடக்கி வைத்துவிட்டனர். வாய் கிழிய பேசும் ஸ்டாலின் எத்தனை புதிய மருத்துவமனைகளை கொண்டு வந்துள்ளீர், எத்தனை புதிய மாவட்டங்களை கொண்டு வந்தீர்கள்.

இப்போது சொல்கிறார் வீட்டிற்கு செல்லும் போது உங்களுடன் ஸ்டாலின் என்கிறார் கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கே இருந்தீர்கள் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

புதுசு புதுசா அறிவிப்பார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் ஆனால் எதையும் செய்ய மாட்டார். 525 வாக்குறுதியை கோடுத்துவிட்டு 10% கூட நிறைவேற்றவில்லை., வேண்டுமென்றால் 525 வாக்குறுதியை எடுத்து வருகிறேன், ஒவ்வன்றாக செக் செய்து பார்ப்போம்.

100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவேன் என சொன்னார், ஆனால் பார்த்த வேலைக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத அரசாக இந்த அரசு இருந்தது, அதற்கும் அமித்ஷாவுடன் பேசி 3000 கோடியை எடப்பாடி பழனிச்சாமி தான் பெற்று கொடுத்தார் என பேசினார்.

இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவும் ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி, உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவும் கழக அமைப்பு செயலாளருமான ஐ.மகேந்திரன்,மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் துரைதனராஜ், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் மகேந்திரபாண்டி, உசிலம்பட்டி நகரச் செயலாளர் பூமாராஜா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.