• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குயின்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும்… இந்து சமய அறநிலையத்துறை வழக்கு

Byகாயத்ரி

Jun 17, 2022

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணுகோபால திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று கூறி பூங்காவை காலி செய்ய வேண்டும் என்று இந்து சமய நிலை துறை சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோவிலுக்கு சொந்தமான நிலம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, நில உரிமை தொடர்பான விவகாரம் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாக கூறி குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.