இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்து, குரூப்-ஏ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் சிந்துவும், இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அகானேவும் கைப்பற்றினர். மூன்றாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.