தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தியதாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் 3 மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த 3 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.