• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வைரலாகும் பிறந்த குழந்தையின் ‘புஷ்பா’ ஸ்டைல்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது புஷ்பா திரைப்படம்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது நடந்த தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா வென்றுள்ளது.

இந்த படத்தில் புஷ்பாவாக நடித்த அல்லு அர்ஜுனின் பாடி லாங்வேஜ் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது. அடங்காவதண்டா என சொல்லி தாடையில் கைவைக்கும் அவரின் மேனரிசம் இந்தியா முழுவதும் ட்ரண்ட் ஆனது. பலரும் அதுபோலவே செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் புதிதாக பிறந்த குழந்தையின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அந்த குழந்தை புஷ்பா அல்லு அர்ஜுன் போலவே கையை வைத்திருப்பது பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.