
ரவி கிருஷ்ணாவின் கேடி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தமன்னா. தொடர்ந்து தல, தளபதி, சூர்யா, விஷால் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார்! அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிஸியான தமன்னாவுக்கு, பாகுபலி பட வாய்ப்பு கிடைத்தது!
சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தில் சிம்புவின் வயதான கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தமன்னா நடித்து இருப்பார். இதுகுறித்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா, “இந்த படத்தில் எனக்கும் சிம்புவுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகவில்லை.
எனக்கு பல ஹீரோக்களுடன் நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது. ஆனால், அந்தப் படத்தின் கதை காரணமாக எங்கள் இருவருக்கும் செட்டாகவில்லை. அவருடன் இணைந்து வேறு ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
