• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாய்க்குட்டியை திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு

ByA.Tamilselvan

May 21, 2022

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை புல்லட்டில் வந்து திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு- காவல்துறை விசாரணை.
மதுரை வைகை தென்கரை முனின்சாலை இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் தனது வீட்டில் பெமரேனியன் இனத்தை சேர்ந்த வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்றை பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டி வைகை ஆற்றை ஒட்டியுள்ள சாலைப்பகுதிக்கு சென்றுள்ளது. அழகான நாய்க்குட்டி ஒன்று உரிமையாளர் இன்றி சாலையில் திரிவதை கண்ட புல்லட் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை அங்கிருந்து திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து நய்க்குட்டியின் உரிமையாளர் ராணி தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புல்லட் வாகனத்தில் வரும் இளைஞர்கள் நாய்க்குட்டியை தூக்கிச்செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.