• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா பேட்டி..,

ByS. SRIDHAR

Mar 16, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் 966 இடங்கிளில் 1681 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது, இதில் 8000 பேர் பணி செய்ய உள்ளனர்,

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படையினர், 3 எஸ்எஸ்டி குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் சுழற்சி முறையில் மூன்று முற்றுக்களாக பணி செய்ய உள்ளனர், மேலும் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வீடியோகிராபர் கொடுக்கப்பட்டுள்ளது, வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நோடல் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஒவ்வொரு தொகுதிக்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

24/7 செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது, புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 18005990142, 1950 வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்தின் சி விஜில் செயலியில் புகைப்படம் எடுத்து அனுப்பலாம் 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவித்த 15 to 20 நிமிடங்களில் அந்த இடத்திற்கு அலுவலர்கள் செல்வார்கள்.

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இருந்து எடுத்து செல்லவேண்டாம். முறையான ஆவணங்களை கொடுக்கவில்லை என்றால் பணம் பறிமுதல் செய்வதோடு வழக்கு பதிவு செய்யப்படும்..