புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகர மேயர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணை மேயர் லியாகத்தலி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை நகராட்சியாக இருந்தபோது உள்ள 42 கவுன்சிலர்களும் இந்த கூட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.

மாநகராட்சி பகுதிக்குள் உள்ள நாய்கள் தொல்லை குறித்து விவாதித்த போது விரைவில் கருத்தடை மருத்துவமனை ஒன்று தொடங்க இருப்பதாக ஆணையர் நாராயணன் தெரிவித்தார். மேலும் பெரும்பாலான பாமக உறுப்பினர்களிடமிருந்து வந்த கோரிக்கையாக நகருக்குள் குரங்கு தொல்லை பன்றி தொல்லை மற்றும் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. பருவம் தவறி பெய்யும் மழையால் சாலைகள் மிகவும் பழுதடைந்து கிடப்பதை சரி செய்ய வேண்டும் என்றும் ஒப்பந்த பணிகள் முடிக்கப்படாமல் நிறைய பணிகள் தேங்கி நிற்கின்றன என்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகள் இந்த கடை இன்னாருக்கு என்று ஒதுக்காத நிலையில் ஏற்கனவே புதிய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் முன்பணம் வாங்கி இருந்த நிலையில் இப்போது ஏழரை லட்சம் ரூபாய் கேட்பதும் அதற்கு மாமன்றக் கூட்டத்தில் எந்த விதமான ஒப்புதலும் பெறாமல் வசூலிப்பதாகவும் மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

அதற்கு பதில் அளித்த ஆணையர் நாராயணன் மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் லியாகத் அலி ஆகியோர் பொங்கல் முடிந்து ஒவ்வொரு வேலையாக பார்த்து விடலாம் என்றும் என்ன என்று விசாரிப்போம் என்றும் பதிலளித்தனர்.




