

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் விஜயபிரபாகரன் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி தனது கவர்ச்சிகரமான பேச்சை தொடங்குவதற்கு முன்னதாகவே கூட்டத்தில் கூடியிருந்தவர்கள்’ அண்ணன் கே.டி.ஆர் வாழ்க! என்று கோசத்தோடு கூடியிருந்த கூட்டத்தில் அனைவரும் கரகோசத்தோடு கூச்சல் எழுப்ப .., அனைவரையும் அமைதியாக்கி விட்டு பேசத் தொடங்கிய கே. டி ராஜேந்திர பாலாஜி..,
எங்கு பார்த்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பற்றித்தான் பேச்சு.
குமரி முதல் டெல்லி வரை எங்கு பார்த்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பேச்சாக உள்ளது. அதிமுக கூட்டணிக்காக ஏங்கியவர் எத்தனையோ பேர் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி சாதாரண ஆள் கிடையாது. அவருக்கு பின்னால் 2 கோடி தொண்டர்கள் உள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி எவருக்கும் அடங்காதவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் பொதுமக்களால் நேசிக்கப்படும் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.


