• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு

Byவிஷா

Jun 10, 2024

கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக ஓராண்டில் 210 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். ஆனால் புதிய கல்வியாண்டில் பல்வேறு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு மொத்த வேலை நாட்கள் 220ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த சனிக்கிழமை வேலை நாட்கள்?

ஜூன் 29
ஜூலை 13
ஆகஸ்ட் 10, 24
செப்டம்பர் 14, 21
அக்டோபர் 5, 19
நவம்பர் 9, 23
டிசம்பர் 14, 21
ஜனவரி 11
பிப்ரவரி 1, 15, 22
மார்ச் 1, 22
ஏப்ரல் 5

எனவே 19 சனிக்கிழமைகளில் பள்ளி வேலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பாக மாத வாரியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களுக்கு பயிற்சி:
எண்ணும் எழுத்தும் – ஜூன் 2024 – தொடக்க நிலை ஆசிரியர்கள்
தகவல் தொழில்நுட்ப பயிற்சி – ஜூன் 2024 – அனைத்து நிலை ஆசிரியர்கள்
வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி – ஜூன் 2024 – உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
ஆங்கிலப் பேச்சு பயிற்சி – ஜூன் 2024 – உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள்
குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பயிற்சி – ஜூலை 2024 – தொடக்க நிலை ஆசிரியர்கள்
மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்தும் பயிற்சி – ஜூலை 2024 – தொடக்க, உயர் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்கள்
குழந்தைகளின் சிறப்பு தேவைகளை கையாளுதல் மற்றும் செயல்படுத்துதல் – ஆகஸ்ட் 2024 – அனைத்து நிலை ஆசிரியர்கள்
நிலை வாரியான கற்றல் கற்பித்தல் – அக்டோபர் 2024 – தொடக்க, உயர் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்கள்
வினவும் கலை – நவம்பர் 2024 – தொடக்க, உயர் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்கள்
இதுதவிர, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சிக்கு தனியாக பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உணவு இடைவேளையில் சிறார் இதழ் வாசித்தல், புத்தக வாசிப்பிற்கு தனியாக பாடவேளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாடு உள்ளிட்ட தனித்திறன்களுக்கு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 5 பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.