• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குண்டு குழியுமாக இருக்கும் தார் சாலையால் பொதுமக்கள் அவதி!

ByKalamegam Viswanathan

Jun 30, 2026

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் இருந்து வெள்ளிமலைப்பட்டி வரை உள்ள தார் சாலை பழுதடைந்து கற்கள் தெரிந்து குண்டு குழியுமாக உள்ளது.

இதனால் இந்த தார்சாலையில் பயணிக்கக் கூடிய பொதுமக்களுக்கு சிரமமாகவும், விபத்துக்குள்ளாகும் நிலைமையும் உள்ளது. இந்த தார்சாலையை புதிதாக அமைத்து தரக்கோரி பலமுறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் ,மதுரை மாவட்ட ஆட்சியரிடமும்,முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை இல்லை.

எனவே பொதுமக்கள் நலன் கருதி கேசம்பட்டியில் இருந்து வெள்ளிமலைப்பட்டி வரை புதிதாக தார் சாலை அமைத்து தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.