பல்லடம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கபட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்த வந்த போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் செந்தில் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இருசக்கர வாகனங்களை சாலையில் வரும் வாகனங்களை தடுப்பதற்காக வழி மறைத்து நிறுத்தி இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான பல்லடம் போலீசார் மாதப்பூர் பகுதிக்கு விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலைகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்துள்ள போலீசார். இது தொடர்பாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை பல்லடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.