• Sat. Jul 20th, 2024

கோவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம்…. மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் அறிவிப்பு…

கோவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க தீர்மான பொதுக்கூட்டம் வரும் 4ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.
கோவை கொடீசியா அருகில் உள்ள யி.ஸி.ரெசிடன்சி கூட்ட அரங்கில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில், கோவை மாநகர் மாவட்டக்கழக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார் (முன்னாள் மேயர்)அவர்கள் தலைமையில், மாநகர் மாவட்டக்கழக நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி. கண்ணப்பன், பி.ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மா.மகுடபதி, மு.மா.ச. முருகன், ர.கார்த்திகேயன், எஸ்.கே.ஆனந்தகுமார், ஜோ.நோயல்செல்வம்,வெ.சசிகுமார்,எஸ்.பி.சரஸ்வதி, ச.குப்புசாமி, தங்கம்(எ)சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ, 4-11-2022 அன்று, கணபதி பழைய சத்தி சாலையில் நடைபெற உள்ள, ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். பின்னர் கீழ்காணும் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


இந்த செயற்குழுக் கூட்டத்தில், தலைமைக்கழக நிர்வாகிகள் கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, இலக்கிய அணி அ.திராவிடமணி, தீர்மானக்குழு மு.இரா.செல்வராஜ், வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, பகுதிக்கழகச் செயலாளர்கள் துரை.செந்தமிழ் செல்வன், மா.நாகராஜ்,
இரா.சேரலாதன், எஸ்.எம்.சாமி,சிங்கை மு.சிவா,ஷேக் அப்துல்லா, ஆர்.எம்.சேதுராமன், ப.பசுபதி, மார்க்கெட் எம்.மனோகரன்,வி.ஐ.பதுருதீன், லோகனாதன்,அஞ்சுகம் பழனியப்பன், கே.எம்.இரவி, ஏ.எம்.கிருஷ்ணராஜ், வ.ம.சண்முகசுந்தரம், பரணி கே.பாக்கியராஜ், கோவை மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் வரிவிதிப்பு, நிதிக்குழுத்தலைவர் வி.பி.முபசீரா பதுருதீன், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:
இந்தியை தீவிரமாக திணிக்க வேண்டும் என்று அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளிவந்தவுடன் இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள்தான் அதை எதிர்த்து கண்டன அறிக்கை
வெளியிட்டார். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 15.10.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. மாண்புமிகு பிரதமருக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 16.10.2022 அன்று கடிதம் எழுதி இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9.9.2022 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது” என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18.10.2022 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, அதை மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழக மக்களிடையை விளக்கிடும் வகையிலும் – அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், வருகிற 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.00 மணியளவில், பழைய சத்தி சாலை, கணபதி அருகில், தமிழக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற உள்ள “இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில், திமு கழக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எக்ஸ். எம்.பி அவர்களும், மதுரை சாதுராஜன் அவர்களும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
அது சமயம், கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழகச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், அணிகளின் துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், பாக முகவர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *