சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வேப்பமரம் வட்ட பிள்ளையார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில் எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தீபாவளி திருநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ள நிலையில் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக வெளியூர் செல்வதற்காக பேருந்து நிறுத்தங்களில் அதிக அளவு கூட்டமாக நிற்பதாலும் மழைக்காலம் என்பதாலும், நிழற்குடை இல்லாத நிலையில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோரிடம் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விரைவில் நிழற் குடைகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மேலும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
