• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பேருந்துகளில் கேரியர் அகற்றம் மீண்டும் பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து உதகைக்கு செல்லக்கூடிய சில அரசு பேருந்துகளில் பயணிகள் எடுத்துச் செல்லும் பொருட்கள் வைப்பதற்காக கேரியர் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கடந்த சில நாட்களாக சில பேருந்துகளில் திடீரென கேரியர்கள் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பொருட்களை தங்கள் மடியிலும் மற்றும் காலுக்கு அடியிலும் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அல்லது பயணிகள் நடக்கக்கூடிய இடத்தில் வைத்து விடுகிறார்கள் அவ்வாறு வைக்கும் பொருட்களால் பயணிகள் அமர்வதற்கும் நின்று பயணிக்கவும் சிரமப்பட்டு வருகின்றனர் திடீரென அகற்றப்பட்ட கேரியர் சுமார் 700 கிலோ எடை கொண்டதாக உள்ளதால் பயனில்லாமல் உள்ளது என கருதி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கேரியர்கள் எல்லாம் அகற்றப்பட்டது என ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தெரிவித்தனர். பயணிகளின் நலன் கருதி மீண்டும் அரசு பேருந்துகளில் எடை குறைவாக தரத்துடன் மீண்டும் கேரியர் பொருத்தப்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்