பர்மிட் இல்லாத இடத்தில் மினி பேருந்து இயக்குவதால் பொதுமக்கள் அவதி முதலமைச்சர் தனி பிரிவிற்கு பகுதி மக்கள் புகார்… நடவடிக்கை எடுக்குமா? வட்டார போக்குவரத்து அலுவலர்கள்..,
மதுரை மாநகர் கூடல்புதூர் என்பது அரசுப் பேருந்து அதிகம் இல்லாத ஒரு பகுதியாகவே உள்ளது. இங்கு சுமார் 5000 த்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கிருந்து மக்களுக்கு வேலை, மருத்துவம், பள்ளி கல்லூரி, வெளியூர்களுக்கு சென்றுவர போதிய பேருந்து வசதி இல்லை, இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் மு.சங்கர் (கூடல்புதூர்).

இதற்காகவே 2000 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த அரசுப் பேருந்து சேவை இல்லாத அல்லது குறைவாக உள்ள அனைத்து இடங்களிலும் மினிபஸ் சேவை கொடுக்கப்படும் என்ற திட்டம். இது எங்கள் பகுதி மக்களை போன்று இருக்கும் எல்லாருக்கும் வரப்பிரசாதமாக இருந்தது. இதனால் எங்கள் பகுதியின் வழியாக செல்வதாக காரணம் காட்டி கூடல்புதூர் to தமுக்கம் மற்றும் தமுக்கம் to கூடல்புதூர்… பாத்திமாகாலேஜ் to மாட்டுத்தாவணி மற்றும் மாட்டுத்தாவணி to பாத்திமாகாலேஜ் (வழி கூடல்புதூர்) என்று பெர்மிட் வாங்கியுள்ளனர். இப்பகுதியில் இயங்கும் மினிபஸ் உரிமையாளர்கள்…
ஆனால் இன்று வரை கூடல்புதூர் பகுதியின் வழியாக எந்த மினிபஸ்களும் இயங்கவில்லை (தடம் மாறி மெயின் ரோட்டின் வழியாகவே இயங்குகிறது) மற்றும் தமுக்கம் to கூடல்புதூர் மினிபஸ்கள் ஆனையூரிலேயே நின்றுவிடுகிறது. இதனால் கூடல்புதூர் மக்கள் 2km மெயின்ரோட்டிற்கு சென்று மினிபஸ் ஏறி பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக ஏழை, எளிய முதியோர்களின் நிலை இதிலும் மோசமாக உள்ளது.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அடித்தட்டு மக்களுக்காக கொண்டு வந்த மினிபஸ் சேவை (பெர்மிட் ரூட் இருந்தும்) இன்று வரை கூடல் புதூர் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை தங்களுக்கு CM CELL மனு மூலம் தெரியப்படுத்துகிறேன்.
ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து, இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு இப்பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு அரசின் நல்ல திட்டம்(மினிபஸ் சேவை) சென்று சேருவதற்கு தடம்மாறி செல்லும் மினிபஸ்கள் மீது பெர்மிட் ரத்து போன்ற அதிகப்பட்ச நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனுவும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
