திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று தை மாதம் தெப்ப திருநாளை முன்னிட்டு, இரண்டாம் திருநாளில் சுப்ரமணியசுவாமியும், தெய்வானை அம்மனும் தங்கச் சப்பரத்தில் மூன்று வீதியான சன்னதி வீதி, கீழ ரத வீதி, மேலரத வீதிகளில் வலம் வந்து மாலை திருவாச்சி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. வெள்ளி பூத வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.




