

உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற Happy Street- உடற்பயிற்சி, ஆடல் பாடல் என பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் Happy Street நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உடற்பயிற்சிகள், யோகா, முதலுதவி சிகிச்சை அளித்தல் போன்ற பயிற்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் பம்பரம், ஸ்கிப்பிங், டயர் ஓட்டுதல், காகித ராக்கெட், பரமபதம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், Face Painting, 360° Camera, ஆகியவைகளும் இடம்பெற்றிருந்தன. இதனை பலரும் விளையாடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை அங்கிருந்து அனைவரும் ஆடி பாடி உற்சாகத்துடன் கண்டு கழித்தனர்.

