


கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க, காவல் துறையினர் பேருந்து பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர்.
கோவை, மாநகரில் ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் தலைமையில் காட்டூர் காவல் ஆய்வாளர் சரவணன் உட்பட 40 க்கும் மேற்பட்ட போலீசார் காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் நகர பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

பேருந்து பயணிகள், பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், அதே போல பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் போதை ஆசாமிகள், பிக்பாக்கெட் ஆசாமிகள், மிரட்டல் விடும் நபர்களை, கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த சோதனையானது தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

