பல்லடம் நகராட்சி நிர்வாகம் உச்சநீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டது. தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18ம் வார்டு வடுக பாளையம் ஹாஸ்டல் ரோடு சாலையில் பல லட்சம் மதிப்பிலான புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் தார் சாலை அமைக்கும் போது, பழைய தார் சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதற்கு தமிழக தலைமை செயலகம் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதில் நீதிமன்றம் மற்றும் அரசு அளித்த எந்த ஒரு உத்தரவையும் பின்பற்றாமல் 17 மற்றும் 18 வார்டு பகுதிகளில் பழைய தார் சாலையை அகற்றாமல் அதன் மேலயே புதிய தார் சாலை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் எந்த உத்தரவையும் மதிக்காமல் இப்படி பழைய தார் சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைத்தால் எங்கள் வீடுகள் சாலையிலிருந்து இறங்கி பள்ளமாக காணப்படும். மேலும் மழைகாலங்களில் சாலையில் செல்லும் மழை நீர் எங்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகளில் வெள்ள பெருக்கு காணப்படும். எனவே முதல் கவனத்தில் எடுத்து பல்லடம் நகராட்சி தரமான முறையில் எங்களுக்கு தார் சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.