• Sun. Dec 10th, 2023

ஆண்டிபட்டியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அமமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய கழகச் செயலாளர்கள் தவச்செல்வம், சுரேஷ், நகர செயலாளர் வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராமர் தமிழக அரசு 100 முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்த்திய திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ,தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் ,கூட்டுறவு கடன் தள்ளுபடி முறையாக செய்யவும், விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வரவும் ,சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சீராக அமைக்கவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன், பேரூர் இணைச் செயலாளர் ரவிக்குமார், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் குருசாமி ,மகளிர் அணி விமலா, அமுதா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மோகன் குமார், பாசறை புது ராசா, செல்லத்துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்பெரியகுளம் ஒன்றிய செயலாளர் கணேசன், கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட செயலாளர் வெற்றி, ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *