• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

Byvignesh.P

Jul 25, 2022

அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று அகில இந்திய சட்ட உரிமை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பாண்டியன் ஆலோசனைப்படி தேனி மாவட்டம் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கானா விளக்கு பகுதியில் அமைந்துள்ள இமயம் மணமகிழ்மன்றம் அரசு விதிகளை மீறி மதுபான கடையாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி மாவட்ட நிர்வாகம் அந்த மணமகிழ் மன்றத்தின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கருவேல் ஆனந்த் தலைமையிலும், ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.