
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி இன்று சுமார் 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. ஏழு உற்கடை கிராமங்கள் உள்ளன.
சிறுமலையில் விவசாயம் மட்டுமே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது தற்போது சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் சிறுமலை ஊராட்சி பகுதியில் அரசு மதுபான கடை கிடையாது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவல்துறை வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவுடன் சிறுமலை பழையூர் புதூர் அகஸ்தியர் புரம் தென்மலை உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பகுதிகளில் கோபி என்பவர் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இப்பகுதி மக்களும் பலமுறை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால்,
இன்று சிறுமலைபுதூர் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதே பகுதியில் உள்ள டீக்கடையில் கோபி மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பெண்கள் திருவிழா நேரத்தில் மதுபானம் விற்கக் கூடாது என்று கூறியுள்ளனர் அவர்களை மிரட்டி துரத்துவதாகவும், இதனால் ஆத்திரமூட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஒன்று இணைந்து கோபியின் டீக்கடைக்குள் புகுந்து அங்கு விற்பனைக்காக அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த மதுபான பெட்டிகளை எடுத்து சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமலை வனப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மதுபானம் இனி விற்பனை செய்யக்கூடாது. வனத்துறை அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிக் கொண்டு செக்போஸ்டில் இருந்து மதுபானத்தை மழையில் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கின்றன. அவர்களும் அனுமதி அளிக்கக்கூடாது அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பேருந்து வழிமறித்து பெண்கள் சாலை மறியலில் போராட்டத்தில் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர்.
