விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மெயின் வாசல் அருகே இன்று காலை தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ம் , மாவட்ட வனத்துறையை கண்டித்து O.A.நாராயணசாமி மாநில தலைவர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொருளாளர் சுப்பா ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் கணேசன், விருதுநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் நாட்டு நாய் வளர்ப்போர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் O A நாராயணசாமி பேசுகையில் “காட்டு பன்றிகளை வனத்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவைகளால் எங்கள் உயிருக்கும், விளைநிலங்களுக்கும் சேதம் ஏற்படுகிறது,ஆகவே நாங்கள் நாட்டு நாய்களின் மூலம் பாதுகாத்து வருகிறோம், ஆனால் வனத்துறை அதிகாரி எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார். எனவே தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். ஆர்ப்பாட்டம் முடிவில் ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.
