• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் வழக்கறிஞர் ரயில் நிலையம் முன்பு போராட்டம்

BySeenu

Jul 11, 2024

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சட்டத்தினால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே கைதிகளும் ஒரு நாள் லாகப்பில் இருந்தால் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருக்கும் போது தற்போது நீண்ட நாட்கள் வைத்து இருக்க வேண்டும். இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பி பெற வேண்டும்.

ஒருவரை கை விளங்கு மாட்டி அழைத்துச் செல்வது மிகவும் வேதனையான விஷயம். அதனை மத்திய அரசு அமல்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தனர்.