

எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசு தரமான கல்குவாரி பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும் அகில இந்திய கட்டுநர் சங்கம் மற்றும் அனைத்து ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கம் மற்றும் அனைத்து ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் காரைக்கால் கடற்கரை சாலையில் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பீட்டர் தன்ராஜ், பொருளாளர் கந்தகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் கலந்துகொண்டு எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

