

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஆண்கள் 12, பெண்கள் 18 என மொத்தம் 30 பேர் ஹஜ் புனிதப் பயணம் இந்த மாதம் 27 ஆம் தேதி மேற்கொள்கின்றனர். இப்பயணம் காரைக்காலில் இருந்து 39- வது ஆண்டாக இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமாதான கமிட்டி உறுப்பினர்கள் இவர்களின் சார்பில் ஹஜ் பயணிகளை கவுரவித்து, வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காரைக்கால் மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் கலந்து கொண்டு தலைமையில் நடைபெற்ற விழாவில், மும்மத பிரார்த்தனை, மற்றும் சிறப்புரைகள் நடைபெற்றது. பிறகு ஹஜ் பயணிகளை கவுரவித்து பேசினார்கள்.தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த புனித பயணம் குடும்பத்துடன் சென்று வர நான் வாழ்த்துகிறேன்.இதற்கு ஹஜ் கமிட்டி சிறப்பான பாதுகாப்பான ஏற்பாடு செய்துள்ளது என பேசினார். மேலும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளை செய்யும் எனவும் தேவைப்பட்டால் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்றும் கூறினார்கள்.



இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன், காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் முனைவர் குலசேகரன், புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில், புதுச்சேரி அரசு வக்பு வாரிய உறுப்பினர் முஹம்மது ஜாஹிர் ஹுசைன் மற்றும் சமாதான கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஹஜ் யாத்திரை பயணிகளை கௌரவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.




