விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி ஐ டி யு மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார், கட்டுமான தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார் .ஒன்றிய பொருளாளர் சங்கர்ராஜ் வரவேற்று பேசினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை உடனடியாக வாபஸ் பெறவும், மணல் குவாரிகளை அதிகப்படுத்தி பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டது போல் ஒரு மீட்டர் அளவு மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்,
எனவும் 60 வயது கடந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பெரிய சக்கரை நன்றி கூறினார்.