• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

BySubeshchandrabose

Oct 29, 2025

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட தலைவர் பாலமுருகன் மாவட்ட செயலாளர் சுருளி மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கை விளக்கினார்கள் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதந்திற ஊதியத்தினை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் வழங்கிட வேண்டும்

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தின் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவரை எழுத்தாருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும் என்று கூறியும் உட்பட16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 300க்கு மேற்பட்ட ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்று கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.