• Sat. Apr 26th, 2025

செல்போன் டவர் அகற்றக்கோரி மயானத்தில் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Apr 4, 2025

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூரில் 1 பிட் கிராமத்தில் கிராம நிர்வாக 1 அதிகாரியாக கந்துவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அப்பகுதி ஆதி திராவிட மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் குறைதீர்க்கும் முகாமில் சந்தித்து விஏஓ முறைகேடாக மயான பகுதியில் பட்டா வழங்கியும் தனது மனைவி பெயரில் 18 சென்ட் இடம் மற்றும் எட்டு பட்டாக்கள் வாங்கியுள்ளார்.

மேலும் தனது அண்ணன் மகன் பெயரில் பட்டா வழங்கியுள்ளார் மேலும் பலருக்கு பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா வழங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர் அதன் பேரில் கடந்த 28 3 2024 அன்று வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரணை செய்து அதன் அடிப்படையில் விஓ கந்துவேல் கடந்த ஏப்ரல் ஒன்னு தேதி முதல் உச்ச பட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் விஏஓ கந்துவேல் 15 நாள் விடுமுறை அளித்து சென்றதால் தற்போது புதிதாக பொறுப்பு விஏஓ ராஜாங்கம் பொறுப்பு தலையாரி முருகன் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நிலையூர் 1பீட் ஆதிதிராவிட மயான ம் மற்றும் அருந்ததியர் காண மயானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இதை அறிந்து வந்த ஆஸ்டின் பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆதிதிராவிட பொதுமக்கள் எங்கள் மயானம் மொத்தம் 99 செண்டு இடம் உள்ளது.

அதை அளந்து சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் மேலும் மயான இடத்தில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரை அகற்றும் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரி ராஜாங்கத்திடமும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரியிடம் தெரிவித்து கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியதன் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.