• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பேருந்து வராததை கண்டித்து போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Aug 14, 2025

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 26 எச் என்ற அரசு பேருந்து தினசரி ஒன்பது முறை காலை 6:30 ஏழு முப்பது எட்டு முப்பது பத்து முப்பது நண்பர்கள் ஒரு மணி மாலை 4 மணி இரவு 8 மணி இரவு 10 மணி ஆகிய நேரங்களில் கடந்த சில ஆண்டுகளாக பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி காலை மாலை என இரு வேலை மட்டும் கிராமத்திற்குள் பேருந்து வருவதாகவும் ஆகையால் ஏற்கனவே எங்கள் கிராமத்திற்கு அறிவித்தபடி 9 முறை பேருந்து வர வேண்டுமென கூறி பொதுமக்கள் தாராபட்டி கிராமத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வதற்காகவும் இறக்கி விடுவதற்காகவும் மட்டுமே காலை மாலை என இருவேளை பேருந்து வருவதாகவும் இரவு நேர பேருந்து வராததால் பெண்கள் பொதுமக்கள் தாராப்பட்டி பிரிவில் இறங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலை அடிவாரத்தில் உள்ள ஊருக்கு செல்ல வேண்டி உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் வயதானவர்கள் பிரிவில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாராப்பட்டி கிராமத்திலிருந்து அரசு மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தாராபட்டி கிராமத்திற்கு பேருந்தை முறையாக அனுப்ப வேண்டும் இல்லையென்றால் இரண்டு நாட்களுக்குள் மதுரை சோழவந்தான் மெயின் சாலையில் பொதுமக்கள் ஒன்று கூடி சாலை மறியல் செய்யப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பு இன்று காலை 7 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஐந்து கிலோ மீட்டர் முன்னாடியே காமாட்சிபுரம் என்ற கிராமத்திற்கு சென்று விட்டு மதுரை பெரியார் நிலையம் திரும்பி சென்றதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.