தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் மாநிலம் முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.