• Fri. Apr 19th, 2024

ராஜமவுலிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய வாக்குறுதி

பாகுபலி என்கிறதெலுங்கு சினிமாவை இந்திய சினிமாவாக அதன் பிரம்மாண்டத்தின் மூலம் மாற்றி வெற்றிபெற்றவர் இயக்குனர் ராஜமவுலி பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர் என்கிற மனநிலையில் இருந்த தமிழ் ரசிகர்கள் பாகுபலி படத்தின் வருகைக்கு பின் ராஜமவுலியின் ரசிகர்களாக மாறிப்போனதை மறைக்க முடியாது அது நேற்றையதினம்(27.12.2021) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் மூலம் வெளிப்பட்டது.


இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’ படம் ஜனவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘ப்ரீ-ரிலீஸ்’ நிகழ்ச்சி சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட படக்குழுவுடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், கவிஞர் மதன் கார்க்கி, மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, R.B.சௌத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரை வாழ்த்திப் பேசிய உதயநிதி ஸ்டாலின், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சினிமா சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன். இதற்கு ஒரே காரணம், இயக்குநர் ராஜமவுலி மட்டுமே. அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். வந்தவுடனே நான் அவரிடம், இந்தப் படம் ‘பாகுபலி 2’வின் சாதனைகளை முறியடிக்கும் என்று சொன்னேன்.எனக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

அப்போது இதே ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் நடித்த ‘மகதீரா’ படம் வெளியானது. படம் தெலுங்கில் பயங்கர ஹிட். அதன் தமிழ் பதிப்பானமாவீரன்’ 2011-ல் வெளியானது. அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


அந்தப் படம் தொடர்பான நிகழ்வில், இயக்குநர் ராஜமௌலி என்னிடம் பேசினார். ‘இந்தப் படத்தை உங்கள் நிறுவனமான ரெட் ஜெயன்ட்டுக்குக் கொடுத்திருக்கிறோம். எனக்கு ஒரேயொரு ஆசை. எனக்கு சென்னை சத்யம் தியேட்டர் மிகவும் பிடித்த திரையரங்கம். அதன் பெரிய ஸ்க்ரீனில் இந்தப் படத்தை நீங்கள் வெளியிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

அதேபோல் செய்தோம்.இந்த ‘RRR’ படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட்தான் வெளியிடுகிறது. இப்போது சொல்கிறேன். சத்யம் தியேட்டரில் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. அதில் 5 ஸ்க்ரீன்களில் நிச்சயம் ‘RRR’தான் வெளியாகும். இந்தப் படத்தின் வெற்றி உறுதிதென்னிந்திய சினிமாவின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *