தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.
அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் பிஸியாக இருந்தார். தற்போது மீண்டும் ரீ- என்ரி கொடுத்து சில படங்களில் அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது தவிர அரசியல், பட தயாரிப்பு, சீரியல் தயாரிப்பு என்று பிஸியாக இருக்கும் குஷ்பு தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
மேலும் அவர் வித விதமாக உடை அணிந்து அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். இந்த வகையில் குஷ்பு தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார். அதில் சிவப்பு நிற புடவையில் முதுகில் டாட்டூ குத்திருப்பது தெரியும் படி போட்டோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பே உடல் எடையை குறைத்து இருந்தால் அந்த படத்தில் நீங்கள் ஹீரோயினாகவே நடித்திருக்கலாம் என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர்.