• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் நீடிக்கும் மழை – 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!..

Byமதி

Oct 6, 2021

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வந்தது.

அடுத்த 24மணி நேரத்திற்கு, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.