

மதுரையில் அரசு மருத்துவமனைக்கு காசநோய் கண்டறியும் நுண்ணோக்கிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் -CSR சார்பாக அநேக சமூக சேவைகளை முன்னெடுத்து செயலாற்றி வருகிறது. நமது மதுரை மாவட்டத்தில் முத்தூட் CSR மூலம் கல்வி, சுகாதாரம், சுற்றுசூழல் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார முன்னேற்ற பணிகளை செய்துவருகிறது.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது, மதுரை மாவட்டத்தில் காசநோய் முற்றிலுமாக தடுக்கவும், பரவாமல் தடுக்கவும், பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்திற்கு உதவ முத்தூட் பைனான்ஸ் தங்களது சமூக பொறுப்பு திட்டம் மூலம், 6 லட்சம் மதிப்புள்ள காசநோய் கண்டறியும் 10 நுண்ணோக்கிகளை 10 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியது. நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட சுகாதாரபணிகள் இணை இயக்குனர் மருத்துவர். செல்வராஜ், நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட காசநோய் துணை இயக்குனர் மருத்துவர். ராஜசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பாரதி வரவேற்றார். முத்தூட் CSR மேலாளர் எஸ். ஜெயக்குமார், மதுரை எய்ட்ஸ் கட்டுப்பாடு மாவட்ட மேலாளர் ஜெயபாண்டி,முத்தூட் மண்டல நிர்வாக மேலாளர் P. விஜயக்குமார், பிராந்திய இயக்குனர் ராஜசேகர், முத்தூட் MGBC மேலாளர் முருகேசன், திரு. மனோ பாரதி, மண்டல அலுவலர் கார்த்திக், மார்க்கெட்டிங் கார்த்திக் மற்றும் காசநோய் தடுப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அஜித் கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.
