
மதுரையில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம், உரிய பணி பாதுகாப்பு. யுஜிசி பரிந்துரைத்த சம்பளமான ரூபாய் 50 ஆயிரம் வழங்கக்கோரி, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுரையில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கல்லூரி கல்வி இயக்குனரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரமேஷ் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் விரிவுைரையாளர் அருணாதேவி கூறியது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றவர்களின் ஊதியம் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் உயர்த்துவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் விரிவுரையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவே தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 12 மாதங்களுக்கும் யுஜிசி பரிந்துரைத்த சம்பளமான ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தியும், தமிழ்நாடு முதலமைச்சர், உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்களிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
