• Wed. May 15th, 2024

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி குற்றவாளி…

ByBala

Apr 29, 2024

இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை, இரண்டாவது முறையாக தண்டனை விபரம் அறிவிப்பு ஒத்திவைப்பு, நிர்மலா தேவிக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் தண்டனை உறுதி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிர்மலாதேவி. கடந்த 2018 ஏப்ரல் 15ம் தேதி அதே கல்லூரியில் பயிலும் மாணவியரை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி தமிழக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 16ஆம் தேதி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி தமிழக அரசு அறிவித்தது.
ஏப்ரல் 24ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 25 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஓர் ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

2018 ஜூலை – 13ம் தேதி அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 1160 பக்கம் கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸ் சார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும் 2018 செப்டம்பர் 7 ம் தேதி இரண்டாவது கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். மொத்தமாக 3 பேருக்கு எதிராக 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இவ்வழக்கின் எதிரிகளாக கருதப்படும் பேராசிரியை நிர்மலாதேவி உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் வழக்கின் புகார்தாரர்களான கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர் அருப்புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் பேராசிரியர்கள் என சுமார் 104பேரிடம் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.

மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் முதல் குற்றவாளி பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி வழக்கறிஞர் தண்டனை விவரங்கள் குறித்து ஒரு கோரிக்கை வைத்தார் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிரசாந்த் பூஷன் வழக்கில் குற்றவாளிக்கு கடைசியாக தண்டனை குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தண்டனையை வேண்டும் எனவும் இதுகுறித்து சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினர் அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று தீர்ப்பு விவரங்களை இன்றே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்பாக அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவியின் வழக்கறிங்களிடம் ஏதேனும் கோரிக்கை உள்ளதா என்று கேட்டால், அதேபோல் மீண்டும் தண்டனை குறித்து பேச தங்களுக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் என கூறிய நிலையில் ஒருநாள் அவகாசம் அளித்து நாளை 30 ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் அதற்கு முன்பாக தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என கோரி தண்டனை இவரை அறிவிக்க மீண்டும் இரண்டாவது முறையாக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

நாளை நிர்மலா தேவியின் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் நிர்மலா தேவிக்கு ஏழாண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதியாகும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *