• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

எல்.முருகனுக்கு வேண்டுகோள் விடுத்த பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி!!

Byமகா

Aug 23, 2022

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

திருநெல்வேலியில் ஒண்டிவீரன் தபால்தலை வெளியீட்டு விழாவை முன்னிட்டு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்திய சுதந்திர போராட்ட அமிர்த பெருவிழா நிகழ்ச்சியில் 197 பக்கங்கள் கொண்ட 145 தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் பட்டியல் தொகுப்பு வெளியிடப்பட்டது. உலகின் முதல் தற்கொலைப்படை தளபதி சுந்தரலிங்கனார் மற்றும் வடிவு அன்னையார் போன்றவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக எல்.முருகன் இருந்த பொழுது 2020 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் தளபதி சுந்தரலிங்கனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தாக குறிப்பிடுகிறார்.

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் தளபதி சுந்தரலிங்கனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது தளபதி சுந்தரலிங்கனார் அவர்களை எப்படி மறந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் அழகுராஜா. கொங்கு நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி, பண்ணாடி அவர்களை எப்படி மறந்தீர்கள் என்பது தெரியவில்லை இல்லை அவர்கள் வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற காரணமா இல்லை தேவேந்திரகுல வேளாளர் சமுதாயங்கள் அரசியலில் ஆளுமை பற்றி விளங்க கூடாது என்ற எண்ணமா என்று தெளிவு படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியிடம் கேட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த பொழுது செப்டம்பர் 8 அன்று ஐந்து அமைச்சர்கள் தளபதி சுந்தரலிங்கனார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் அண்ணாமலை இந்த 2022 ஆண்டு ஏப்ரல் 14 அன்று தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் அமைந்திருக்கக் கூடிய தளபதி சுந்தரலிங்கனார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார்.! இது மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான உங்களுக்கு தெரியாதா? திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த தேவேந்திர குல வேளாளர் சமூகம் தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.! இதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவும்.! கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரு சட்டமன்ற தொகுதி கூட தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு வழங்கவில்லை, காலையில் கட்சியில் சேர்ந்த டாக்டர். சரவணன் என்பவரை மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக மாலையில் அறிவித்தீர்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பாஜக சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் பட்டியல் வெளியிட்ட போதும் தேவேந்திர குல வேளாளர் சமூகத் தியாகிகள் பெயர்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உள்ளேயே இருந்து கொண்டு தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், இவர்களை களை எடுக்காத வரை ஒரு நாளும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளராது.

வடநாட்டில் பிறந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தளபதி சுந்தரலிங்கனார் அவர்களைப் பற்றி தெரிகிறது. தற்போதைய திராவிட மாடலின் மக்கள் முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தளபதி சுந்தரலிங்கனார் அவர்களை பற்றி தெரிகிறது. சுதந்திர தின பட்டியலில் மாவீரன் போர்படை தளபதி சுந்தரலிங்கம் குடும்பத்தினர் படம் அரசு இதழில் இடம் பெற்றிருந்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தளபதி சுந்தரலிங்கனார் அவர்களைப் பற்றி தெரிகிறது, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கு தளபதி சுந்தரலிங்கனார் அவர்களைப் பற்றி தெரியவில்லை….

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு கிழக்கு பகுதியில் இருக்கக் கூடிய மாநகராட்சி திருமண மண்டபத்தின் அருகில் இருக்கக் கூடிய அருண்ஸ் மஹால் என்ற திருமண மண்டபத்தில் மத்திய அமைச்சர் முருகன் தலைமையிலான இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்று வரக்கூடிய 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழா கண்காட்சியை நேரில் சென்று பார்த்த போது, இந்திய தேசத்தை பெருமைப்பட வைக்கும் வகையில் உயிர் தியாகம் செய்த உலகின் முதல் தற்கொலைப் படைத்தளபதி சுந்தரலிங்கனார் மற்றும் வடிவு அன்னையார் ஆகியோர் பெயர்கள் கண்காட்சியில் இடம் பெறவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகவும்,
அவர்களின் உயிர் தியாகத்தை மீண்டும் மீண்டும் கொச்சைப்படுத்துவதாகவும் மனம் குமுறகிறார் அழகுராஜா பழனிச்சாமி.

இந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் கண்காட்சி பெயர் பட்டியலை உருவாக்கிய நபர்கள் மீது எல்.முருகன் மத்திய இணை அமைச்சர், மற்று மத்தியஅரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.