தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது மூலமாக, கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மெட் காலாவில் ஏற்பட்ட சந்திப்பு காரணமாக உருவான காதலால் பிரபல ஹாலிவுட் இசை கலைஞரும் நடிகருமான நிக் ஜோனஸை காதலித்து கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ரா குழந்தையை பெற்றுகொண்டனர்! நியூயார்க்கில் நடிகை பிரியங்கா சோப்ரா புதிதாக ஒரு ரெஸ்டாரன்ட்டை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்நிலையில், திடீரென தனக்கு ரொம்ப ஃபேவரைட்டான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வந்த விலைக்கு அவர் விற்றிருக்கும் தகவல் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய வட்டாரங்கள் இது பற்றி கூறுகையில், கணவர் நிக் ஜோனஸ் உடன் அமெரிக்காவிலேயே இவர் வசித்து வருகிறார் என்றும், அந்த கார் வீணாக கரேஜிலேயே சும்மா கிடப்பதால் அதனை தற்போது விற்க முடிவு செய்து விற்று விட்டார் எனக் கூறுகின்றனர். நடிகை பிரியங்கா சோப்ராவிடம் மெர்சிடஸ் மேபேச் S650, ஆடி Q7, BMW 5 சீரிஸ், மெர்சிடஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் உள்ளிட்ட சொகுசு கார்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.