• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“ஜாலியா ஜிம்கானா”-வாக அடுத்த ப்ரோமோ!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியா ஜிம்கானா பாடல் இன்று வெளியாகவதாக கடந்த 16-ஆம் தேதி ப்ரோமோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ஜாலியா ஜிம்கானா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளது. ப்ரோமோ மிகவும் கலகலப்பாக இருப்பதால் வைரலாகி வருகிறது.

இந்த பாடலை நடிகர் விஜயே பாடியுள்ளார். கு.கார்த்திக் என்பவர் பாடலை எழுதியுள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஜாலியா ஜிம்கானா பாடலுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.