• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

3வது முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திரமோடி விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்து

Byவிஷா

Jun 11, 2024

3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி முதல் கையெழுத்தாக 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் தனது முதல் கையெழுத்திட்டார்.
3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி,நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டார். “இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவஇல், 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்ற தான் தயாராக உள்ளதாகவும். இந்தியாவை புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தனது அமைச்சரவை செயல்படும் என்றும். இளமை மற்றும் அனுபவம் கலந்த வகையில் அமைச்சரவை சகாக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.