


அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

