

அதிக மக்களால் விரும்பப்படும் புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படும் தலைவர்களின் பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற அரசியல் புலனாய்வு அமைப்பு வாரந்தோறும் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட நாட்டு மக்கள் இடையே அவர்களின் தலைவர்களின் செயல்பாடு, திட்டங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, மக்களின் கருத்துக்கு ஏற்ப தலைவர்கள் வரிசைபடுத்தப்படுகின்றனர்.இந்த வகையில், நவ., முதல் வாரத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 70 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பெற்று உள்ளார்.வட அமெரிக்க நாடான மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் மரியோ திராகி, ஜெர்மனி தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துஉள்ளனர்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இதையொட்டி பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
