தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருந்தாலும் கூட முழுவதுமாக வைரஸ் நம்மைவிட்டு போகவில்லை. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மோகனாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இருவருக்கும் சிறிய அளவில் கொரோனா தொற்று தென்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் இருவரும் வீடு திரும்புவர் என்றும் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.