• Tue. Sep 17th, 2024

லேசா கண்ண மூடுனது ஒரு குத்தமா..!அதிபர் வைரல்

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது உக்ரைன் விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் மைதானத்திற்குள் நுழைந்தபோது ரஷ்ய அதிபர் புடின் தூங்கினார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 30 நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் 94 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பெய்ஜிங்கில் உள்ள பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த தொடக்க விழாவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாடுகளும் அவரவர் நாட்டின் கொடி மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புடின் கலந்துகொண்டார். இந்நிலையில், உக்ரைன் விளையாட்டு வீரர்கள் குழு ஒன்று மைதானத்தில் நுழைந்தபோது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தூங்கிவிட்டார் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது. இதைப்பார்த்த பலர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது இடத்தில் அமர்ந்து தூங்கிவிட்டாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தை பார்க்கும்போது அவரது கண்கள் மூடிய நிலையில் காணப்படுகின்றன. எனினும், அப்போது விளாடிமிர் புடின் தூங்கினாரா..? என்பது உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *