முகலாயப் பூங்கா முழுவதும் நீண்ட நேரமாக சுற்றிப்பார்த்தில் சோர்வான ஸ்ரீயாவுக்கு குடியரசு தலைவர் டைரி மில்க் சாக்லெட் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரின் அழைப்பின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பணிக்கு விடுமுறை அளித்துவிட்டு, ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாயப் பூங்காவுக்கு விஜயம் செய்தனர்.
அப்போது இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணாவுடன் ராஷ்டிரபதி பவனுக்கு வந்த அவரது பேத்தி ஸ்ரீயாயர்லகட்டாவுக்கு குடியரசு தலைவர் சாக்லேட் வழங்கியது க்யூட்டான தருணமாக மாறியது.
டெல்லியில் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து உற்சாகப்படுத்திய குடியரசுத்தலைவர்..!
