• Fri. Jun 2nd, 2023

ஆந்திரா ஐடி அமைச்சர் மாரடைப்பால் உயிரிழப்பு….

Byகாயத்ரி

Feb 21, 2022

ஆந்திரபிரதேச மாநிலத்தின் தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மேகபதி கவுதம் ரெட்டி. இவர் இன்று காலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார். இதற்கு முன்பாக கவுதம் ரெட்டி நேற்று துபாயில் இருந்து இந்தியா வந்தார். இந்த நிலையில் கவுதம் ரெட்டி நேற்று மாரடைப்பு காரணமாக ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து இன்று அவருக்கு திடீரென்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த அமைச்சர் கவுதம் ரெட்டி, ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தின் ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரானவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *