• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-மக்கள் அலறிஅடித்த ஒட்டம்

ByA.Tamilselvan

Jan 24, 2023

தலைநகர் டெல்லியில் பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.
டெல்லி என்சிஆர் பகுதிகளில் பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய புவியியல் மையத்தின்படி, நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இருந்தது தெரிய வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.